முதலாம் ஸ்தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்:அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

way of the cross - station 1


விவிலியச் சிந்தனை(மத்தேயு 7:1-5)

பிறரை குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். உங்கள் கண்ணில் இருக்கும் துரும்பை பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன். வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருந்து துரும்பை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய் கண் தெரியும்.

ஜெபம் : (எல்லோரும்)
ஆண்டவரே! இயேசுவே! நான் அடிக்கடி பிறரைத் தீர்ப்பிடுகிறேன். அவர்களை உணர்ந்து கொள்ளவும் அன்பு செய்யவும் தவறி விடுகிறேன். நான் மக்களை உமது கண்ணோட்டத்தில் பார்க்கவும், பிலாத்துவின் கண்கள் மூலமாய் காணாதிருக்கவும் அருள்புரியும். ஆமென்!

மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்.

தாளாச் சிலுவையைச் சுமக்க வைத்தார் - உம்மை
மாளாத் துயரால் துடிக்க வைத்தார்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

இரண்டாம் ஸ்தலம்