எட்டாம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்:
விவிலியச் சிந்தனை(லூக்கா 23:27-29,31)
பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெணகள் பக்கம் திரும்பி, ”எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம், மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது மலடிகள் பேறுபெற்றோர் என்றும், பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர் என்றும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்டமரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்.”
ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உமக்கு நேர்ந்த சொல்லற்கரிய துன்பத்தையும் பாராமல் நீர் பிறருக்கு ஆறுதல் கூறினீர்.மற்றோருக்காக நீர் காட்டும் கருணை என் உள்ளத்தை ஆட்கொள்ளுகிறது. நான் உம்மைப் பற்றி நினைக்கும் போது, நீர் அன்பு காட்டும் விதத்தையும், நான் தாழ்ந்த, மற்றும் தன்னலம் நிறைந்த உள்ளம் கொண்டவன் என்பதையும் கருத வைக்கிறது. தன்னலம் பாராது பிறர்நலம் நோக்கவும், துன்புறுவோருக்கு ஆறுதல் கூறவும் எங்களுக்கு நல்மனத்தைத் தந்து, தூய வழியில் நாங்கள் நடந்திட அருள்வீராக. ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
மூன்றாம் முறையாய் நீர் விழுந்தீர் - கால்
ஊன்றி நடந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக ஒன்பதாம் ஸ்தலம்