ஐந்தாம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்:
விவிலியச் சிந்தனை(1பேதுரு 4.12-14 )
அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார்.அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்துகொண்டுபோகச் செய்தார்கள்.அன்புக்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் சோதிக்கப்படும் போது, ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டது என வியக்காதீர்கள். மாறாக கிறிஸ்துவின் துனபங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள். அப்போழுது கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படும் வேளையில் இன்னும் மகிழ்ந்து பேருவகை கொள்வீர்கள். கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில் கடவுளின் மாட்சிமிக்க தூயஆவி உங்கள் மேல் தங்கும்.
ஜெபம் : (எல்லோரும்)
ஆண்டவரே! இயேசுவே! பல சமயங்களில் நான் மற்றவர்களின் தேவைகளுக்குப் பாராமுகமாய் இருந்திருக்கிறேன். என்னை அன்பு செய்யும் மகக்ளையும் உதாசீனபப்டுத்தி விடுகிறேன். பிறரை நேசிக்கவும், உண்மையாகவே உறுதியுடன் உம்மை என் வாழ்வில் கண்டுகொளள்வும் எனக்கு அருள் புரியும். ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
நிலையாய்ப் பதிந்தது உம் வதனம் - அன்பின்
விலையாய் மாதின் சிறு துணியில்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக ஆறாம் ஸ்தலம்