இரண்டாம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்:
விவிலியச் சிந்தனை(பிலிப்பியர் 1:20-23 )
ஆளுநனின் படைவீரர், இயேசுவை ஆளுநன்மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்தபடைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்றுகூட்டினர். அவருடைய ஆடைகளை உரிந்து,கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்குஅணிவித்தனர்.
அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரதுதலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒருகோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,"யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம்செய்தனர். அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர். அவரை ஏளனம்செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக்கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச்சென்றனர்.
ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! உம்மேல் சுமத்தப்பட்ட சிலுவை எங்கள் பாவங்களின் விளைவு என்பதை உணர்கின்றோம். யார்மீதும் அநியாயமாகப் பழிசுமத்தாமல் இருக்கவும், எங்கள் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் என்னும் சிலுவையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளவும் எங்களுக்கு அருள்தாரும். ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
விழுந்தீர் சிலுவைப் பளுவோடு - மீண்டும்
எழுந்தீர் துயர்களின் நினைவோடு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக