ஒன்பதாம் ஸ்தலம்

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்:

way of the cross - station 9


விவிலியச் சிந்தனை(திருப்பாடல்கள் 22:1; 40:11-13 )

இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்டமறுக்காதேயும்.உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக! ஏனெனில் எண்ணிறந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன. என் குற்றங்கள் என்மீது குவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது. ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும். ஆண்டவரே, எனக்கு உதவி செய்யவிரைந்து வாரும்.

ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! மீண்டும் மீண்டும் கீழே விழுந்ததால்உம் உடல் எல்லாம் இரத்தமயமாயிற்று. எங்கள்பாவங்களுக்காக நீர் நொறுக்கப்பட்டீர். எங்கள்சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நாங்கள்தூய்மையோடு வாழவும், பாவத்தை வெறுத்து, உம்அன்பில் எந்நாளும் வளரவும் எங்களுக்கு அருள்வீராக.ஆமென்!

மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்

உடைகள் களைந்திட உமை தந்தீர் - ரத்த
மடைகள் திறந்திட மெய் நொந்தீர்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக

பத்தாம் ஸ்தலம்