நான்காம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்:
விவிலியச் சிந்தனை(மாற்கு 3:31-34 )
அப்போழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள். அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்றுகொண்டு உம்மைத் தேடுகிறார்கள என்று அவரிடம் சொன்னார்கள். அவர் அவர்களைப் பார்த்து, என் தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு தம்மை சூழ்ந்து அமர்ந்திருப்பவர்களைச் சுற்றிலும் பார்த்து, இதோ என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் என்றார்.
ஜெபம் : (எல்லோரும்)
ஆண்டவரே! இயேசுவே! உம் அன்னை உம்மேல் கொண்டுள்ள அன்பானது அவரது வேதனையை முந்திக்கொண்டு மேல்நோக்கி உள்ளது. நீர் அநேகம்முறை பிறரில் என்னிடம் வருகிறீர். அவர்களின் அன்பு எனக்கு புதுவாழ்வை அளிக்கிறது. நீர், மற்றவர் மூலம் எத்தனை முறை என் வாழ்வில் அன்பு செய்கிறீர் என்று காண அருள் புரியும். ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
மறுத்திட முடியா நிலையாலே - சீமோன்
வருத்தினார் தன்னை உம்மோடு
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக ஐந்தாம் ஸ்தலம்