ஆறாம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்:அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்:
விவிலியச் சிந்தனை(மத்தேயு 25:37-40 )
அதற்கு நேர்மையாளர்கள் ஆண்டவரே, எப்பொழுதுஉம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம்,அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத்தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக்கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடைஇல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்?எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக்கண்டு உம்மைத்தேடி வந்தோம்?” என்று கேட்பார்கள்.அதற்கு அரசர்,மிகச் சிறியோராகிய என் சகோதரர்சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம்எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” எனப் பதிலளிப்பார்.
ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! வியர்வையாலும் இரத்தத்தாலும் கறைபட்ட உம் திருமுகத்தை ஒரு பெண்மணி அன்போடு துடைத்து உமக்கு ஆறுதலளித்தார்.சில நேரங்களில் நான் பிறருக்கு உதவிட அஞ்சுகிறேன். நான் செயற்பட வேண்டிய நேரத்தில் ஒன்றும் செய்வதில்லை. நீர், எனக்கு ஆழ்ந்த தைரியம் கொண்ட விசுவாசத்தை அளித்தருளும். நீர் என்னோடு இருக்கிறீர் என்று நம்பிக்கை கொள்ள எனக்கு உதவியருளும். ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
ஓய்ந்தீர் பளுவினைச் சுமந்ததினால் - அந்தோ
சாய்ந்தீர் நிலத்தில் மறுமுறையும்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக
ஏழாம் ஸ்தலம்