மூன்றாம் ஸ்தலம்
முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி
உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உம்முடைய பரிசுத்த பாரமான திருச்சிலுவையைக் கொண்டு, உலகத்தை மீட்டு இரட்சித்தீர்.
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற
விழுகிறார்:
விவிலியச் சிந்தனை(யாக்கோப்பு 1:2-4)
என் குற்றங்கள் என்னும் நுகம் அவர் கையால்பூட்டப்பட்டுள்ளது. அவை பிணைக்கப்பட்டு, என் கழுத்தைச் சுற்றிக் கொண்டன். அவர் என்வலிமையைக் குன்றச் செய்தார். நான் எழ இயலாதவாறு என் தலைவர் என்னை அவர்கள் கையில் ஒப்புவித்தார்.இவற்றின் பொருட்டு நான் புலம்புகின்றேன். என் இருகண்களும் கண்ணீரைப் பொழிகின்றன். என் உயிரைக்காத்து ஆறுதல் அளிப்பவர் எனக்கு வெகு தொலையில் உள்ளார். பகைவன் வெற்றி கொண்டதால் என்பிள்ளைகள் பாழாய்ப் போயினர். சீயோன் தன் கைகளை உயர்த்துகின்றாள். அவளைத் தேற்றுவார் யாருமில்லை.
சூழந்து வாழ்வோர் யாக்கோபுக்கு எதிரிகளாயிருக்குமாறு ஆண்டவர் கட்டளையிட்டார். எருசலேம் அவர்களிடையே தீட்டுப்பொருள் ஆயிற்று.
ஜெபம் : (எல்லோரும்)
அன்பு இயேசுவே! சிலுவையின் பாரத்தால் நீர் முகம்குப்புறக் கீழே விழுந்தீர். துன்ப துயரங்களின் சுமையால்வாடுகின்ற மக்களைக் கனிவோடு கண்ணோக்கிடஎங்களுக்கு அருள்வீராக. ஆமென்!
மு: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
அ: எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில்
தயவாயிரும்.
மு: மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய
இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ: ஆமென்
தாங்கிட வொண்ணாத் துயருற்றே - உம்மைத்
தாங்கிய அன்னைத் துயருற்றாள்
எனக்காக இறைவா எனக்காக இடர்பட வந்தீர் எனக்காக.